March 23, 2013 01:47 pm
பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் உள்ள சாஷ்மாவில், 2 அணு
உலைகள் உள்ளன. தற்போது 3-வது அணு உலை ஒன்றும் அங்கு கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு
சீனா இரகசியமாக தொழில் நுட்ப உதவிகள் செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை
குற்றம் சாட்டியுள்ளது.
இதன்
மூலம் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது என்றும் அமெரிக்கா
கூறியுள்ளது. இதற்கான இரகசிய ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி 15 முதல் 18-ம் திகதிக்குள்
பெய்ஜிங்கில் கையெழுத்தாகி உள்ளது.
இதற்காக
பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனின் பிரதிநிதிகள் சீனா சென்று ஒப்பந்தம்
செய்துள்ளனர்.
அதில்
சாஷ்மாவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி உலையை நிறுவுவது என திட்டமிட்டு பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அங்கு 2 அணு உலைகளும் சீன தொழில் நுட்பத்தில்தான்
தயாரிக்கப்பட்டுள்ளன.
thamilan thanks
No comments:
Post a Comment