அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 March 2013

பாலியல் வன்கொடுமை : மும்பையில் அனாதைகள் ஆச்சிரம நிறுவனருக்கு மரணதண்டனை



உளவியல் பாதிப்புக்குள்ளான ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் மும்பையில் அனாதைகள் ஆசிரம நிறுவனர் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் கலம்போலி பகுதியில் கல்யானி மஹிலா பல் சேவ சந்த்ஸ்தா எனும் அனாதைகள் ஆசிரமத்தை நடத்தி வரும் ராமச்சந்திரா கரஞ்சூலே (54)  என்பவருக்கே இவ்வாறு மும்பை நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூளை நலம், உடல் நலம் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் உட்பட ஐந்து பெண்களை ஆசிரமத்தில் இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதில் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டுள்ளது.

இப்பெண்கள் மீதான பாலியல் பலாத்கார குற்றசாட்டில் மேலும் ஐந்து பேரில்  மூவருக்கு ஆயுள் தண்டனையும் இருவருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

உளரீதியில் பாதிப்புக்குள்ளான அனாதைக்குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமம் ஒன்றே இவ்வாறு வக்கிரங்களில் களமிறங்கியிருப்பதற்கு நீதிபதி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அந்த ஆசிரமத்தின் 19 பெண்கள், இவ்வாறு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிறிய அறைகளில் நெருக்கமாக அடைக்கப்பட்டு எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி அங்கு பராமரிக்கப்பட்டுள்ளனர்.  பணம் திரட்டுவது மட்டுமே கண்காணிப்பாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. 


4tamilmedia thanks

No comments:

Post a Comment