March 2013 19:39

பர்மாவில் தொடர்ந்து இரு நாட்களாகப் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் ஒரு பௌத்தத் துறவி உட்பட 10 பேர் கொல்லப் பட்டனர்.
இதனையடுத்து அங்குள்ள முக்கிய நகரான மெய்க்டிலா எனும் முக்கிய நகரில் இரு நாட்களுக்கும் மேலாக ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.
புதன்கிழமை நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்று கூடி வன்முறையில் ஈடுபட்டதுடன் பல கடைகளுக்குத் தீ வைத்தும் இரு முஸ்லிம் மத சம்பந்தமான கட்டங்களைச் சேதமாக்கியும் உள்ளனர். இதனை அடுத்து அங்கு நிலமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர என 144 ஆவது சட்டப் பிரிவின் படி அவசர காலச் சட்டம் பிரயோகிக்கப் பட்டதாக அரசு அறிவித்துள்ளது. எனினும் இச்சட்டத்தை மீறியும் சில தீவிர மதவாதிகல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பர்மாவில் அடிக்கடி இவர்களுக்கும் சிறுபான்மையின முஸ்லிம்கள் அதிலும் முக்கியமாக ரோஹிங்கியா பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறை நிகழ்ந்து வருகின்றது. உச்சக் கட்டமாகக் கடந்த வருடம் பர்மாவின் மேற்கு மாநிலமான ராக்கைனில் நிகழ்ந்த தீவிர வன்முறையில் 200 பேர் கொல்லப் பட்டதுடன் 120 000 பேர் வதிவிடங்களை இழந்தனர். இதில் பெரும்பான்மை தமக்கென சொந்த மாநிலமற்ற சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment