அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 17 March 2013

ஈழ மக்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ தமீழிழம் தான் தீர்வு: சரத்குமார்


[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 02:14.04 AM GMT +05:30 ]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை பிரச்சினையில் மாணவ சமுதாயம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும், இலங்கையில் இனியும் ஒரு தமிழனைக்கூட நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அக்கறையை வெளிப்படுத்தியிருப்பதையும் நான் மனதாரப் பாராட்டி வரவேற்கிறேன். மாணவர்கள் போராட்டம் நடத்துவது மட்டுமின்றி தமிழக மக்களிடையே ஈழ ஆதரவு பிரசாரம் செய்து ராஜபக்சேவுக்கு எதிரான விழிப்புணர்வை நம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இலங்கை அரசின் இனப்படுகொலையைவிட, மத்திய அரசின் மவுனமும், மெத்தனப்போக்கும் இன்னும் பல மடங்கு எரிச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்துகிறாரே தவிர, மத்திய அரசின் தீர்க்கமான முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை.

தமிழின படுகொலை புரிந்த இலங்கை அரசு குற்றவாளி என்பதும், இனியும் ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு என்பதும் நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். 

என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

newindianews. thanks

No comments:

Post a Comment