April 20,
2013 01:50 pm
பிரேசில் நாட்டில், நேற்று
படகு ஒன்று கவிழ்ந்ததில்,
12 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 15 பேரைக்
காணவில்லை என்று கூறப்படுகின்றது. அந்நாட்டின் மராஜோ
தீவில் உள்ள சாவேஸ் நகரிலிருந்து, 10 மணி
நேரப் பயணமாக,
பாரா மாவட்டத்தின் தலைநகரான பெலம் நகருக்கு சென்றுகொண்டிருந்தபோது
இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று, இந்தப் படகை இயக்கிய லூயிஸ் இன்னாசியோ லிமா கூறியுள்ளார். முதலில் 49 பயணிகள் மட்டுமே இருந்ததாகக் கூறிய அவர், பின்னர் 70க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிவித்தார். பயணிகளில் பெரும்பாலானோர், இந்த விபத்து நடந்த சமயத்தில் உறங்கிக்கொண்டிருந்ததகவும் அவர் கூறினார்.
சிறுவர்கள் உட்பட, இதுவரை
12 பேரின்
உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 41 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதில் 9 பேர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கப்பல், இரண்டு
ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆறு நீச்சல்
வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணை
நடைபெற்று வருகிறது.
thamilan thanks
No comments:
Post a Comment