அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 April 2013

19 நூற்றாண்டு இந்தியாவின் அரிய சில புகைப்படங்கள்



கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஏப்ரல், 2013 - 09:39 ஜிஎம்டி
  • 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா தீன்தயாள் புகழ்மிக்க புகைப்படக் கலைஞர் ஆவார். ஹைதராபாத் மன்னரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக அவர் திகழ்ந்தார். 1899ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஹைதராபாத் மன்னர் நிஜாம் மஹ்பூப் அலி கானும் அவருடைய சகாக்களும் புலித்தோலுடன் காட்சியளிக்கின்றனர்.
  • தீன் தயால் பல்வேறு இந்திய நகரங்களில் புகைப்பட நிலையங்களை அமைத்து 59 புகைப்படக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினார். ரஷ்யப் பிரபு அலெக்ஸாண்டர் 1891ல் சிறுத்தை ஒன்றை வேட்டையாடிப் பிடித்த பின்னர் எடுத்த படம் இது.
  • கட்டிடங்கள், இயற்கைச் சூழல், மக்கள் என முப்பதாயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களை தீன்தயாளும் அவரது புகைப்படக் கலைஞர்களும் எடுத்தனர். 1890ல் ஹைதராபாத்தில் நடந்த ஆடை அலங்கார நடன விருந்து ஒன்றில் எடுத்த படம் இது.
  • தீன் தயாளின் புகைப்படங்கள் பற்றிய ஒரு புத்தகம் இந்தியாவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. நிஜாம் மஹ்பூப் அலி கானின் இந்த உருவப்படம் 1887ல் அல்லது 1888ல் எடுக்கப்பட்டது.
  • பஷீர் பாக் அரண்மனையின் விஸ்தார அறை ஒன்று. 1888ல் எடுக்கப்பட்ட படம் இது.
  • 1894ல் இந்தூரில் உள்ள தனது புகைப்பட நிலையத்தில் வைத்து தீன்தயாள் எடுத்த புகைப்படம் ஒன்றின் பின்பக்கம் இது. இவ்வகையான படங்களை கேபினட் கார்ட் போட்டோ என்று சொல்வார்கள்.
  • ஆந்திர மாநிலத்தில் ஹனம்கொண்டா என்ற இடத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபம்.
  • ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிரதம அமைச்சர் நவாப் அஸ்மான் ஜா பகதுரின் புகைப்படம். 1890ல் எடுக்கப்பட்டது.
  • ராஜஸ்தானின் தீக் பகுதியில் உள்ள பிரபல "ஜல மஹால்" அரண்மனையை 1884ஆம் ஆண்டில் எடுத்த புகைப்படம்.
  • ஹைதராபாத்தின் பிரதம மந்திரியாக விளங்கிய மஹாராஜா கிஷென் பிரசாத்தின் உருவப்படம்.
  • குவாலியர் கோட்டையின் நுழைவு வாயிலை 1878ல் எடுத்த புகைப்படம்.
  • முகலாயப் பேரரசர் அக்பருடைய மகளின் சமாதி. இச்சமாதி ஆக்ரா அருகே உள்ளது. 1886-1887ல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

    bbc.co.uk thanks

No comments:

Post a Comment