ஒரினப் புணர்ச்சியாளர்கள் சட்டத்திற்கு எதிராக பாரிஸ் நகரில் ராட்சதப் பேரணி
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:59.31 பி.ப GMT ]
பிரான்ஸ் தலைநகர்
பாரிசில் ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு சட்ட அந்தஸ்தும், தத்தெடுப்பு உரிமையும்
வழங்கக் கூடாது என்று நேற்று இலட்சக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தச் சட்ட எதிர்ப்பில் ஈடுபட்டோர்களில் நூறு பேர் கைதான நிலையில், இன்னும் பல
பகுதிகளில் போராட்டம் வலுவடைந்து வருகின்றது.
இது குறித்து போராட்ட ஒருகிணைப்பாளர்கள் ஆல்பெரிக் ட்யூமாண்ட(Alberic Dumont)
கூறுகையில், எங்களுடைய போராட்டம் இன்னும் கடுமையாக இருக்கும் என்று
தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சியான சோசலிஸ்டுகளும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளான பசுமைக் கட்சி
மற்றும் பொதுவுடைமைக் கட்சியும் ஓரினப் புணர்ச்சிக்கு சட்ட அந்தஸ்து வழங்கத்
துடித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்றைய எதிர்கட்சியான UMP கட்சியும் பிற வலதுசாரிக் கட்சிகளும் இதற்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்பொழுது பிரான்ஸ் நாடு முழுவதும் கடும்
போராட்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது.
பிரான்ஸ் நாடு, பெயரளவில் தன்னை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டாலும்
கத்தோலிக்கச் சமய ஆதிக்கம் அங்கு நிலவுவதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment