பனைக்குளம், ஏப். 30-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் அருகே உள்ளது ஆற்றங்கரை கிராமம். இங்குள்ள காலனியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊரணி பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தது அந்த பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சங்கிலி (வயது55) என்று தெரியவந்தது. அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக சாமிதோப்பை சேர்ந்த முனீஸ்வரன், அழகன்குளம் அருகே உள்ள செட்டிப்பனையை சேர்ந்த பால்சாமி, சங்கர் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள்தான் சங்கிலியின் தலையில் மண் வெட்டியால் தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பெண் விவகாரம் தொடர்பாக இந்த கொலையை செய்ததாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

maalaimalar thanks
No comments:
Post a Comment