Tuesday, 30 April 2013 08:30
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று விழுப்புரத்தில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரியவருகிறது.
மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறையை சிபிஐ விசாரணை நடத்தக்கோரி இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பாமகவினர் பேச வாய்ப்பிருப்பதால், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த அனுமதி மறுப்பால் விழுப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் வேண்டாம், கூட்ட நெரிசல் அதிகமாகும் என கூறியதால் ஆர்ப்பாட்டத்தை விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடத்த அனுமதி தந்திருந்தார்கள். அவர்கள் விதித்த 10 நிபந்தனைகளுக்கும் சம்மதம் தெரிவித்திருந்தோம். இப்போது என்னவென்றால் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என திடீரென அனுமதி மறுத்துள்ளனர் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ரயில்வே நிலையம் அருகே தடையை மீறி பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். இதையொட்டி கட்சித்தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மரக்காணத்தில் நடந்த சாதிக்கலவரங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர். தலித்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்திருந்ததுடன், அரச பேருந்துகள், தனியார் வாகங்கள் என்பனவும் தீயிட்டு எரிகப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment