April 24,
2013 09:40 am
பசிபிக்
பெருங்கடலின்´ரிங் ஆப் பையர்´
என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று நிலநடுக்கம்
ஏற்பட்டது. இன்று காலை4.30
மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில்
6.4ஆகப்பதிவானது. பப்புவா நியூகினியா,
ராபால் பகுதிக்கு வடக்கே 31
கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
பூமிக்கு அடியில் 18
கிலோமீட்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் மக்களுக்கு
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த தகவல்களை
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. இதுவரை உயிர் இழப்புகள் குறித்தோ பொருட்சேதங்கள் குறித்தோ தகவல் இல்லை.
கடற்கரையிலிருந்து 8
கிலோமீட்டர் தொலைவில் இது ஏற்பட்டுள்ளதால்,கடற்கரை பகுதிகளில் பாதிப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ´ரிங் ஆப் பையர்´
பகுதியில் உள்ள டெக்டோனிக் பாறைதட்டுகளில் ஏற்படும் உராய்வின் காரணமாக
பப்புவா நியூகினியாவில் இது போன்று நிலநடுக்கங்ள் அடிக்கடி
ஏற்படுகிறது.
கடந்த வாரம் இந்நாட்டின் வடக்குப் பகுதியை 6.8
அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
1998-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து சுனாமி தாக்கியதில்
2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
/thamilan thanks
No comments:
Post a Comment