அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 19 April 2013

ஜப்பான்-ரஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


டோக்கியோ, ஏப். 19-

ஜப்பானில் அடிக்கடி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியான நெமுரோ பகுதியிலும், அதனை யொட்டியுள்ள ரஷியாவின் கிழக்கு-வட கிழக்குப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. ஆனால் சேத விவரங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியாக வில்லை.

நிலநடுக்கம் நள்ளிரவுக்குப் பின் அதிகாலையில் ஏற்பட்டது. அப்போது மக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி பீதியில் வெளியே ஓடி வந்தனர்.

maalaimalar thanks

No comments:

Post a Comment