அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 19 April 2013

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: மஹிந்த எச்சரிக்கை!


on 19 April 2013.

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறது.

இது தொடர்பில் அமைச்சர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் தலையீடுகள் குறித்து விலாவாரியாக பேசப்பட்டது. இதன்போது அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு விடயத்திலும் அமெரிக்கா தலையிட முயற்சிகளை எடுத்தது.


இவ்வாறானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அவர் குறிப்பிட்டார். "சிறிலங்கா சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நாம் அனுமதியளிக்கப் போவதில்லை. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் செய்வது சாதாரண விடயமல்ல.


நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் ஒரு சதி நடக்கிறதா என்றே நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே, அமைச்சர்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்'' என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
eutamilar thanks

No comments:

Post a Comment