|
மாநகராட்சி மலிவு
விலை உணவகங்களில், இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை ஒரு கோடியை எட்டி
விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது. நேற்று வரை, 94 லட்சம் இட்லிகள் விற்று
தீர்ந்துள்ளன. சென்னையில், கடந்த பிப்., 19 முதல், அரசு நடத்தும் மலிவு விலை
உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
வார்டுக்கு ஒரு
உணவகம் வீதம் இதுவரை, 200 உணவகங்கள் திறக்கப் பட்டு உள்ளன. இவற்றில், 1 ரூபாய்க்கு
இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் விற்கப்படுகின்றன.
தரத்தில் குறையில்லை "எக்காரணம் கொண்டும், உணவின் தரத்தில் எந்த குறைபாடும்
வரக்கூடாது; சுகாதார அலுவலர்கள், பொறுப்பாளர்கள், சாப்பிட்டு பார்த்த பின்பே,
விற்பனையை துவங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
குறைந்த விலையில்,
தரமான உணவு கிடைப்பதால், மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். கூலி தொழிலாளர்
மட்டுமின்றி, அரசு, தனியார் மற்றும் ஐ.டி., நிறுவன ஊழியர்களும், உணவகங்களில் நீண்ட
வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்து செல்கின்றனர். ஒவ்வொரு உணவகத்திலும்,
தினசரி 1,000 முதல், 3,500 வரை இட்லிகள் விற்பனையாகின்றன. இதை ஒப்பிடுகையில்,
சாம்பார் சாதம், 250 முதல், 350 வரை மற்றும் தயிர் சாதம், 100 முதல், 300 வரைதான்
விற்பனையாகின்றன.
சென்னையில் உள்ள
200 மலிவு விலை உணவகங்களிலும், விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ள இட்லி, தினசரி,
மூன்று லட்சம் வரை விற்கப்படுகிறது. அதிகபட்சமாக, கடந்த 20ம் தேதி,
சனிக்கிழமையன்று, 3.16 லட்சம் இட்லிகளும், 64,121 சாம்பார் சாதமும், 25,389 தயிர்
சாதமும் விற்பனையாயின. தொடங்கப்பட்டு 54 நாட்களே ஆன இந்த உணவகங்களில், கடந்த 21ம்
தேதி வரை, 91,12,880 இட்லிகளும், 19,33,561 சாம்பார் சாதமும், 12,21,045 தயிர்
சாதமும் விற்பனையாகி உள்ளன. மொத்தம், 2.24 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
நேற்று, மூன்று
லட்சம் இட்லிக்கும் மேல் விற்று, இட்லி விற்பனை, 94 லட்சத்தை தாண்டியுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை எண்ணிக்கை, ஒரு கோடியை எட்டி விடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர்
கூறுகையில், "மலிவு விலை உணவகங்கள், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு
வருகின்றன.
தரத்தில் எந்த
குறையும் வராதபடி கண்காணித்து வருகிறோம். இன்னும் ஐந்து மாதங்களில், மேலும் சில
மலிவு விலை உணவ கங்கள் திறக்கப்படும்' என்றார். புதினா சட்னியா, ஊறுகாயா? மலிவு
விலை உணவகங்களில், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள ஊறுகாய்
கொடுத்தால் நன்றாக இருக்கும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநகராட்சி
அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசுக்கு, இது தொடர்பாக பரிந்துரை அளித்து உள்ளோம். உரிய
அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம்' என்றனர்.
"எங்களுக்கு
கிடைக்கல' : ஆலந்தூர் மண்டலம், 159வது வார்டு மீனம்பாக்கம் குடியிருப்பு பகுதியில்,
ஒரு மலிவு விலை உணவகம் உள்ளது. இங்கு சமையல் அறை இல்லாததால், 166வது வார்டு
உணவகத்தில் இருந்து இட்லி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் ஆயிரம்
இட்லி மட்டுமே 159வது வார்டு உணவகத்திற்கு வருகிறது. மலிவு விலை உணவகத்தில், காலை
7:00 முதல் 10:00 மணி வரை இட்லி விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆனால், 159வது
வார்டில், குறைந்த எண்ணிக்கையில் இட்லிகள் விற்கப்படுவதால், காலை 9:00 மணிக்கே
விற்பனை முடிந்து விடுகிறது. இதனால், காலை உணவருந்த வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பி செல்கின்றனர். இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"159வது வார்டு, மலிவு விலை உணவகத்திற்கு சரியான இடம் கிடைக்காமல் பெரும்
சிக்கலுக்கு மத்தியில் திறந்தோம். ச
மையல் அறையுடன்
சேர்த்து உணவகம் திறக்க இடம் தேடி வருகிறோம். விரைவில் திறக்கப்படும். அப்போது இந்த
பிரச்னை தீர்க்கப்படும்' என்றார்.
thedipaar thanks
|
No comments:
Post a Comment