|
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களைக்
குறிவைத்து பலவிதமான தள்ளுபடி ஆஃபர்களை அள்ளித் தெளிக்கின்றன கிரெடிட் கார்டு
நிறுவனங்கள். இந்தத் தள்ளுபடிகளினால் வாடிக்கையாளருக்கு என்ன நன்மை? கார்டு
நிறுவனங்கள் ஏன் இப்படி ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன? என்பது குறித்து விளக்கமாகச்
சொல்கிறார் பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. ஆதிஷெட்டி.
''கேஷ் பேக் ஆஃபர், ரிவார்டு பாயின்ட் என்பது எல்லாம்
கிரெடிட் கார்டை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில்தான் தருகிறார்கள். அதாவது,
குறிப்பிட்ட கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கும்போதுதான் இந்த ஆஃபர்கள்
கிடைக்கின்றன. இதனால் அந்த கிரெடிட் கார்டை அதிகமாக வாங்குவார்கள். ஏற்கெனவே கார்டு
வைத்திருப்பவர்கள் அதில் அதிகமான தொகைக்குப் பொருட்களை வாங்குவார்கள் என்பதுதான்
கார்டு தரும் நிறுவனங்கள் போடும் கணக்கு. இதன்மூலமாக கார்டு நிறுவனங்களுக்கு அதிக
பரிவர்த்தனைகள் நடக்கும். இதனை வைத்து அவர்கள் குறைந்த வட்டியில் அதிக கடன் வாங்க
முடியும்.
கிரெடிட் கார்டில் வாங்கும் பணத்தை உடனடியாக கட்ட
வேண்டியதில்லை. தேவைப் பட்டால் இ.எம்.ஐ. முறையில் பணத்தைச் செலுத்திக்கொள்ளலாம்.
இதனுடன் கேஷ் பேக் ஆஃபர், ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கும் போது அந்த வாய்ப்பைப்
பயன்படுத்திக்கொள்ள நினைப்பது மனித இயல்புதான்.
இப்படி பொருட்களை வாங்குவதில் தவறில்லை. இதுபோன்ற
சமயங்களில் நிபந்தனையைத் தெளிவாகப் படித்து புரிந்துகொண்டபிறகு வாங்குவது பல
சிக்கல்களி லிருந்து உங்களைக் காக்கும். ஒவ்வொரு மாதமும் உங்களின் பில்
ஸ்டேட்மென்டுடன் அந்த மாதத்தில் உங்களின் கிரெடிட் கார்டு நிறுவனம் தரும் ஆஃபர்கள்
என்னென்ன? அதற்கான நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து பில்லின் பின்புறத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும். இதை கவனமாகப் படித்து புரிந்துகொள்வது
அவசியம்.
இதில் குறைந்தது எவ்வளவு ரூபாய் பொருள் வாங்கினால் ஆஃபர்
கிடைக்கும், எந்த தேதி யிலிருந்து எந்த தேதி வரை கிடைக்கும், எந்தக் கடைகளில்
கிடைக்கும் என்பதுபோன்ற தகவல்கள் இருக்கும். இதை எல்லாம் கவனித்து முடிவெடுப்பது
அவசியம்.
கேஷ்
பேக் ஆஃபர் என்பது குறிப்பிட்ட கார்டில் வாங்கினால் மட்டும்தான் என்றும்
அறிவித்திருப்பார்கள். எனவே, இந்த ஆஃபர்கள் எல்லா கார்டுகளுக்கும் கிடைக்காது.
அதோடு மொத்தமாக பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. காரணம்,
கிரெடிட் கார்டு நிறுவனமும், பொருளை விற்கும் நிறுவனமும் ஒப்பந்தம்போட்டு அதன்
அடிப்படையில்தான் இதுபோன்ற கேஷ் பேக் ஆஃபர்களை கார்டு நிறுவனங்கள் தருகின்றன.
மொத்தமாகப் பணம் கொடுத்து வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால்தான்
அவர்களுக்கு அந்த ஆஃபர் தருவதில்லை.
இதுபோன்ற கேஷ் பேக் ஆஃபரில் பொருட்களை வாங்கியபிறகு
குறிப்பிட்ட தேதியில் அந்த ஆஃபர் தொகை உங்களின் கார்டில் கிரெடிட் ஆகிவிடும்.
ஆனால், அந்த இ.எம்.ஐ. தொகை உங்களால் கட்ட முடியவில்லை எனில், அந்தத் தொகைக்கு
கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டி போடும். எனவே, உங்களால் திரும்பக் கட்ட முடியும்
என்றால் மட்டுமே பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனம்.
இப்படி ஆஃபர் தரும்போது எம்.ஆர்.பி. விலை
உயர்த்திவிடுவார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு பொருளின் விலை என்பது லாபத்தையும்
உள்ளடக்கியதுதான். எனவே, அவர்களின் லாபம் 30 - 40 சதவிகிதம் எனில் இந்த ஆஃபர்
வெறும் 10 - 15 சதவிகிதமாகவே இருக்கும். இதனால் லாபம் கொஞ்சம் குறைந்தாலும்,
அதிகமானவர்கள் அந்தப் பொருளை வாங்குவார்கள். தவிர, அந்த கிரெடிட் கார்டை வாங்கவும்
யோசிக்க மாட்டார்கள். இரண்டு, மூன்று கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை,
குறிப்பிட்ட கார்டை பயன்படுத்த வைப்பதற்கும் இந்த யுக்தியைப்
பயன்படுத்துகிறார்கள்.
மேலும், நீங்கள்
வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் 10 சதவிகித கேஷ் பேக் ஆஃபர் என்பார்கள்.
ஆனால், அதிகபட்சம் 1,000 ரூபாய் மட்டும்தான் என்று இருக்கும். இதுபோன்ற சமயங்களில்
நீங்கள் 40 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் உங்களுக்கு 1,000 ரூபாய் தான்
திரும்பக் கிடைக்கும்.
ரிவார்டு
பாயின்ட்!
ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் நீங்கள்
பயன்படுத்துவதற்கேற்ப ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கும். இந்த பாயின்ட்களை பணமாக்க
முடியாது. இந்த பாயின்ட்களுக்கு மதிப்பு இருக்கும். 100 ரூபாய்க்கு வாங்கினால் ஒரு
ரூபாய் ரிவார்டு பாயின்ட்-ஆக கிடைக்கும் என்று இருக்கும். நீங்கள் வைத்திருக்கும்
கார்டின் தன்மைக்கு ஏற்ப உங்களின் ரிவார்டு பாயின்ட் மதிப்பிடப்படும்.
உதாரணத்திற்கு, நீங்கள் கோல்டு கார்டு வைத்திருந்தால், 100 ரூபாய்க்கு பொருட்கள்
வாங்கினால் 1 பாயின்ட் என்றும், நீங்கள் பிளாட்டினம் கார்டு வைத்திருந்தால் 150
ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 2 பாயின்ட்கள் என்றும், பிரீமியம் கார்டு எனில்
100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 2 பாயின்ட் என்று ரிவார்டு பாயின்ட்களைத்
தருவார்கள்.
இந்த
ரிவார்டு பாயின்ட்களிலேயே பல வகை உண்டு. கேஷ் பேக் ரிவார்டு, குறிப்பிட்ட கடைகளில்
வாங்கும்போது கிடைக்கும் ரிவார்டு, செல்போன் பயன்பாட்டை பொறுத்து ரிவார்டு,
பெட்ரோல் ரிவார்டு என பலவிதத்திலும் ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கின்றன.
இந்த
பாயின்ட்கள் மொத்தமாகச் சேர்ந்தபிறகு அதன் மதிப்பிற்கு ஏற்ப பொருட்கள் வாங்கிக்
கொள்ளலாம். அதாவது, உங்களின் ரிவார்டு பாயின்ட் 100 ரூபாய் மதிப்பிற்கு இருந்தால்
அதில் பெரும்பாலும் நீங்கள் 60 ரூபாய்க்குதான் பொருட்கள் வாங்க முடியும். ஏனெனில்,
இதில் சர்வீஸ் டாக்ஸ், வேறு வகையான டாக்ஸ் எல்லாம் போக மீதமிருக்கும் தொகைக்குதான்
பொருட்கள் வாங்க முடியும். அதோடு, குறிப்பிட்ட சில கடைகளில்தான் பொருட்களை வாங்க
முடியும் என்ற நிபந்தனையும் இருக்கும். மேலும், நீங்கள் விரும்பினால் கிஃப்ட்
கூப்பன்களாகவும் வாங்கிக் கொள்ளலாம். இதன்மூலமாகவும் பொருட்களை வாங்கிக்கொள்ள
முடியும். கிரெடிட் கார்டு நிறுவனத்தின் இணையதளத்திலும் ரிவார்டு பாயின்ட்களுக்கான
கிஃப்ட்கள் பற்றி இருக்கும். இதை, அதில் உங்களுக்கு விருப்பமான பொருட்களைத்
தேர்ந்தெடுத்தாலும், அந்தப் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும்.
ஆனால், பெரும்பாலான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் 500
பாயின்ட்கள் சேர்ந்தால்தான் அதை பயன்படுத்த அனுமதிக்கின்றன'' என ஆஃபர் பற்றியும்
ரிவார்டு பாயின்ட்கள் பற்றியும் பல முக்கியமான விஷயங்களை எடுத்துச் சொன்னார்
அவர்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இனி எல்லா
ஆஃபர்களையும் அலசி ஆராய்ந்து அதை உபயோகப்படுத்துவதா, வேண்டாமா என்று
முடிவெடுக்கலாமே!
thedipaar thanks
|
No comments:
Post a Comment