பஹ்ரைன் கார்ப் பந்தயத்தின் போது தாக்குதல் நடத்த ஓத்திகை பார்த்த பெண்கள் இருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013,
பஹ்ரைனில் கடும்
எதிர்ப்பு மற்றும் தீவிரவாதிகள் மிரட்டல்களுக்கிடையில், பலத்த பாதுகாப்புடன் கடந்த
ஞாயிற்றுக் கிழமை பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற்றது.மனித உரிமைகள் தொடர்பான
சர்ச்சைகள் வலுத்துள்ளதைத் தொடர்ந்து, இத்தகைய பந்தயங்கள் தடை செய்யப்பட வேண்டும்
என்று வலியுறுத்தி, போட்டி நடைபெற்ற சாகிர் ஓடுதளத்தின் அருகில் உள்ள கிராமங்களில்
தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகள், மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே, கார் பந்தய பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த
திட்டமிட்டிருந்த 2 பெண்களை கைது செய்ததாக காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற 2-ம் நாள் பயிற்சியின்போது, நுழைவாயில் அருகே கைது செய்யப்பட்ட
அந்த இரண்டு பெண்களில் ஒருவர், பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்வதற்காக தனது
ஆடைக்குள் தலையணையை மறைத்து வைத்திருந்தார்.
விசாரணையில் அவர்கள் பெயர்
நசிபா அல்-அல்பர், ரிகானா அல்-முசாவி என்பது தெரியவந்தது. சரியான நேரத்தில் அவர்களை
கைது செய்ததால், மிகப்பெரிய தாக்குதல் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment