ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கூடம் மீது தலிபான்கள் விஷவாயு தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013,
ஆப்கானிஸ்தானில் பெண்கள்
பள்ளிக்கூடம் மீது தலிபான்கள் விஷவாயு தாக்குதல் நடத்தியதில் 74 மாணவிகள்
பாதிப்படைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்திய போது, பெண்களுக்கு பல்வேறு
கட்டுப்பாடுகளை விதித்தனர்.
பர்தா அணியாமல் வீட்டை விட்டு செல்லக் கூடாது. பள்ளிக் கூடங்களுக்கு செல்லக்
கூடாது உள்ளிட்ட தடைகள் அமலில் இருந்தன.
அமெரிக்க தாக்குதலுக்கு பின் தலிபான்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு ஹமீத் கர்சாய்
தலைமையில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
இருப்பினும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள தகார் உள்ளிட்ட மாகாணங்களில்
பெண்கள் பள்ளிக்கூடம் செல்வதற்கு எதிர்ப்பு காணப்படுகிறது.
இதையும் மீறி பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றால், அப்பள்ளிகளின் மீது
தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மூன்று லட்சம் மாணவியர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தலுகான் நகரில் பீவி ஹாவா உயர்நிலை பள்ளியில் கடந்த 18ஆம் திகதி
நச்சு புகை பரவியது.
இதை சுவாசித்த மாணவியர் பலர் மயக்கமடைந்தனர். 74 மாணவியர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில மாணவியரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment