அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 April 2013

சிங்க முகத்துடன் வாழ்ந்த அதிசய மனிதன் (படங்கள்)



lionel-734155-tmவணக்கம் புதியஉலகம் வாசகர் நெஞ்சங்களே… இன்றைய விசித்திர மனிதர்கள் பகுதியினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நீங்கள் சந்திக்க இருக்கும் விசித்திர மனிதர் “சிங்க மனிதன்” அல்லது
“சிங்க முக மனிதன்” என்று வரலாற்றில் பெயர் பெற்ற ஒருவர். இவர் இவ்வாறு அழைக்கப்பட்டமைக்கு காரணம் இவர் உடல் முழுவதும் அதீத உரோமங்களின் வளர்ச்சியே ஆகும். இது ஒரு அரியவகை நோயே ஆகும்.
போலந்து நாட்டில் 1891ஆம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் Bibrowsky. இவரது உடல் முழுவதுமாக உரோமத்தால் மூடப்பட்டுள்ளது. முகத்தில் 20செ.மீ அளவிளான உரோமங்களும் உடலில் ஏனைய பகுதிகளில் 10செ.மீற்றர் அளவிளால உரோமங்களும் வளர்ந்துள்ளது. அவரது உள்ளங்கை உள்ளங்கால் தவிர அத்தனை இடங்களிலும் உரோமங்கள் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.


Lionel – The Lion Faced Boy
இவர் 1901 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்கு சென்று பின்னர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சென்று சர்க்கஸ் பணியில் சேரத்தொடங்கினார். அதன் பின்னரே இவர் “சிங்க மனிதனாக பிரபல்யம் பெற்றார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார் . ஐந்து மொழிகளில் பேசக்கூடிய திறமை பெற்றிருந்தார். 1920 களில் தமது சர்க்கஸ் பணிகளில் இருந்து விலகி அமெரிக்காவிலையே செட்டில் ஆகினார்.
பின்னர் 1932 இல் மாரடைப்பு காரணமாக மரணத்தை தழுவிக்கொண்டார். இறக்கும் போது இவருக்கு வயது 41 ஆக காணப்பட்டது. “சிங்கமுக மனிதன்” பற்றி

puthiyaulakam
thanks 

No comments:

Post a Comment