அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 April 2013

அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் : ஜெ திட்டவட்டம்







அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் : ஜெ திட்டவட்டம்
,

வீணாக அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெற முடியாது என சட்டசபையில் முதல்வர் ‌ஜெயலலிதா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்
.

இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் காவல்துறை மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.தே.மு.தி.க. உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து , தமிழகத்தில் ஆதாயக்கொலைகள் அதிகரித்துவிட்டது.

இதன் மீதான அரசின் நடவடிக்கை என்ன என கேட்டார் . இதற்கு தமிழகத்தில் ஆதாயக்கொலைகள் குறைந்துவிட்டன. உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் கொலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆதாயக்கொலைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் அது குறைவு. விரைவில் 19 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறைக்கு சொந்த கட்டடங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது அரசு பல ‌கோர்ட்டுகளில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளை அரசு திரும்ப ‌பெற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசியதாவது, தன்னையும், தமது அரசையும் அவதூறாக பேசுவதால், அரசு மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் . அவதூறு பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை பாயும். இந்த விஷயத்தில் என்னிடம் கோரிக்கை வைப்பதை விட்டு, அவதூறு பேசுபவர்களுக்கு ஆலோசனை சொல்லலாம் என பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து பேசினார்.

tamilkurinji thanks

No comments:

Post a Comment