அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 April 2013

லிபியாவில் பிரான்ஸ் தூதரகத்தில் கார் குண்டு தாக்குதல்!



on 23 April 2013.
இன்று காலை லிபியாவின் திரிபோலியிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய தூதரகம் அங்கு காவற் கடமையில் ஈடுப்ட்டிருந்த ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளானதோடு மற்றவர் சிறு காயங்களிறகு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

அதிகாலை 7h00 மணியளவில் தூதரகத்தின் முன்னால் குண்டு வெடித்துள்ளது. லிபியக் காவற்துறையினர் இது மகிழுந்து ஒன்றினுள் வைத்து வெடிக்கப்பட்ட குண்டு என்று தெரிவித்துள்ளனர். தூதரகத்தின் முக்கிய பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளானதோடு ஒரு பகுதி சுவர் தீககிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.


ஆனாலும் தூதரக ஊழியர்களும் அதிகாரிகளும் அச் சமயத்தில் தூதரகத்தினுள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் தாக்குதலின் வீச்சு 200 மீற்றர்கள் வரை சேதத்தை உண்டாக்கியுள்ளது. லிபியக் காவற்துறையினர் அப் பகுதியிலுள்ளவர்களை வெளியேற்றி அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்துள்ளனர்.


குண்டுத் தாக்குதலிற்கு இன்னமும் யாரும் உரிமை கோரவில்லை. பிரான்ஸ் அரசாங்கம் இத் தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது. லிபிய அரசாங்கத்தின் மூலம் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதிக்கு முன் விரைவாகக் கொண்டு வரப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.


கடாபியிடமிருந்து லிபியாவை விடுவித்து மாற்று அரசாங்கம் ஒன்றை நிறுவியதிலும் லிபியா மீதான பிரதான வான் தாக்குதல்களை நடாத்திலும் மிக முக்கிய பங்கு வகித்தது பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

News : Source

eutamilar. thanks

No comments:

Post a Comment