இவர்கள், ஈரானிய உளவுத்துறையினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, சவுதிக்குள் உளவு வேலைகள் பார்த்து தகவல் அனுப்பினார்கள் என்று தெரிவித்துள்ளார், சவுதியின் உட்துறை அமைச்சர் ஜெனரல் மன்சூர் அல் துர்கி. கடந்த மார்ச் 19-ம் தேதி, 18 பேர் அடங்கிய குழு ஒன்றை உளவு வேலைகள் பார்த்த குற்றச்சாட்டில் சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்திருந்தனர்.
அவர்கள், சவுதிக்குள் ஒரு உளவு நெட்வெர்க் அமைத்து பல தகவல்களை பெற்று வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர் என்று அப்போது கூறப்பட்டது. அவர்களின் நெட்வெர்க் தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்தே, தற்போது கைது செய்யப்பட்ட 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேலதிக தகவல் எதையும் சவுதி உட்துறை வெளியிடவில்லை.
இவர்கள் என்ன விதமான தகவல்களை வெளியே அனுப்பினார்கள் என்ற விபரமும் தெரியவில்லை. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. தமது மிடில்-ஈஸ்ட் நெட்வெர்க்கின் ஆபரேஷனின் குறிப்பிட்ட சில பிரிவுகளை சவுதி அரேபியாவில் வைத்தே இயக்குகிறது என்பது, மேலதிக தகவல்.
News : Source
eutamilar thanks
No comments:
Post a Comment