- THURSDAY, 23 MAY 2013 17:21

கடந்த மூன்று தினங்களில் மட்டும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 59 காசுகள் சரிவடைந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று தினங்களில் மட்டும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 54.89 பைசாவாக இருந்தது. இது திங்கள் கிழமை அன்று, 22 காசுகள் சரிவடைந்து, 55.11 பைசாவாகவும், இது செவ்வாய் கிழமை அன்று, 31 காசுகள் குறைந்து 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு 55.42 பைசாவாக சரிவடைந்தது.புதன் கிழமை அன்று 5.48 பைசாவாக மேலும் குறைந்துள்ளது.
டாலருக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளதால், அதன் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. அன்னிய நிதி நிறுவனங்கள் இவ்வாண்டில் இதுவரை இந்திய பங்கு சந்தைகளில் சுமார், ஆயிரத்து 350 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க பொருளாதரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு ரிசர்வ் வங்கி பண அளிப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம என்கிற அச்சப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் அன்னிய நிதி நிறுவனங்களின் மூதலீடு குறைய வாய்ப்புள்ளது.
அந்நிய செலவாணி செலவினத்துக்கும், வருவாய்க்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது இந்நிலையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைய வாய்ப்புள்ளது. அன்னிய செலாவணி செலவினத்துக்கும், வருவாய்க்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைவதால் டாலர் வரத்து குறைந்து ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது. மேலும் இந்தியாவில் கடன் பெரும் தகுதியை குறைக்க போவதாக சர்வதேச நிர்ணய அமைப்பான எஸ்$பி எச்சரித்து உள்ளது. மேற்கித்திய நாடுகளின் பொருளாதார மந்த நிலையால் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இதனை அடுத்து சரக்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கும் இடையே உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை கடந்த 2012-13 ஆம் நிதி ஆண்டில், வரலாறு காணாத அளவுக்கு 19 ஆயிரத்து 760 கோடி, டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நமக்கு டாலர் அதிக அளவில் தேவைப்படுகிறது.
இந்நிலையில் அந்நிய செலவாணி கையிருப்பும் குறைந்துள்ளது. இது 7 மாதங்களுக்கான இறக்குமதியை ஈடுகட்டும் அளவுக்கு மட்டுமே உள்ளது. மேலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், டாலர்களை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு குறைந்து வருகின்றது. இதன் மதிப்பு குறைவது, ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் தமது வருவாயில் 80 சதவிகிதத்தை ஏற்றுமதி வாயிலாக ஈட்டி வருகின்றன. எனவே ஐ டி நிறுவன பங்குகளில் கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.
அதே சமயம் ரூபாயின் மதிப்பு சரிவடைவதால் தங்கம், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றின் இறக்குமதி செலவினம் அதிகரித்து, பணவீக்கம் உயரும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

4tamilmedia. thanks
No comments:
Post a Comment