வங்கதேச கட்டிட விபத்தின் மீட்பு பணிக்கு முற்று புள்ளி: மொத்த பலி எண்ணிக்கை 1127
வங்கதேசத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் தலைநகர் டாக்கா அருகே உள்ள ராணா பிளாசா என்ற 8 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது.
அப்போது அங்கு செயல்பட்டு வந்த ஆயத்த ஆடை நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்த்தோர்கள் என்று பல ஆயிரம் பேர் அந்த இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் வெளியே எடுத்தனர். அதன் பின்னர் கடந்த 3 வாரமாக ராணுவம் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என்று பலரை ராணுவத்தினர் மீட்டனர். கடைசியாக ரேஷ்மா என்ற பெண்ணை 17 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 1127 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இனி இடிபாடுகளில் உடல்கள் கிடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தேடும் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.
எனவே, சம்பவம் நடந்த பகுதியை மாவட்ட நிர்வாகத்திடம் நாளை ஒப்படைக்க உள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment