May 23, 2013 02:25 pm
ஈராக்கில் விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. இத் தாக்குதல்களினால், ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தின் சயௌனா பகுதியில் உள்ள ஒரு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டத்தில் ஏழு பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உயிரிழந்தனர்.
விபச்சாரம் மற்றும் மது அருந்துவது இஸ்லாமிற்கு எதிரானது என்பதால்,பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் ஈராக்கில், அவை தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், ஷியா மற்றும் சன்னி பிரிவு மக்கள் கலந்து வசிக்கக்கூடிய சயௌனா பகுதியில்,கடந்த சில ஆண்டுகளாக விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
thamilan thanks
No comments:
Post a Comment