May 23, 2013 02:19 pm
லண்டன் நகரில் பகல் நேரத்தில் ஒரு இராணுவ வீரரை இரண்டு நபர்கள் வழிமறித்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
லண்டன் நகரின் வுல்விச் சாலையில் நேற்று நடந்த சம்பவத்தில், பிரிட்டிஷ் இராணுவ வீரர் ஒருவரை இரண்டு நபர்கள், மாமிசம் வெட்டும் பெரிய கத்தியை கொண்டு தாக்கி,அவரது தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற இருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
பட்டப்பகலில் ஒரு இராணுவ வீரருக்கு நடந்திருக்கும் இச்சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்ககூடுமென சந்தேகிக்கப்படுகிறது.
இக்கொடூர செயலின் வீடியோவில், அந்த இருவரில் ஒருவர் தாங்கள் செய்த செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளமை பதிவாகியுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment