May 24, 2013 04:43 pm
இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார்.
இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது பொலிசில் புகார் அளித்தார்.
அவருடைய கிளினிக்கை பொலிஸார் சோதனையிட்டபோது பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல வாட்ச் கேமராவில் இந்த ஆபாச காட்சியகளை வீடியோவாக பதிவு செய்தது கண்டுபிடிப்பு. பகலில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை, இரவில் தனிமையில் ரசித்து பார்ப்பாராம்.
இவரால் சுமார் 3000 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் திடுக்கிட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
உங்களால் டாக்டர் தொழிலுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. உயர்வான டாக்டர் தொழிலை பயன்படுத்தி அத்தொழிலுக்குரிய கடமை உணர்வு மற்றும் நம்பகத் தன்மைக்கு மாறான வகையில் நடந்ததற்காக இந்த தண்டனையை வழங்குகிறேன்´ என நீதிபதி டக்ளஸ் ஃபீல்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தண்டனை பெற்றுள்ள டவிண்டர் ஜீட் பெயின்ஸ் 1993-ம் ஆண்டு மங்களூர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
thamilan thanks
No comments:
Post a Comment