வடகிழக்கு டெல்லியை சேர்ந்த நடுத்தர வயது பெண் காச நோய் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.குடும்பத் தலைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் அவரது 17 வயது மகள் குடும்ப வேலைகளை கவனித்து வந்தார். தாயாருக்கு உணவு தயாரித்து தந்தனுப்புவதுடன்இ தந்தை மற்றும் தம்பி தங்கைகளையும் அவர் கவனித்து வந்தார்.17-6-2011 அன்று வீட்டில் தனியாக இருந்த அவரை மிரட்டி பெற்ற தந்தையே மிருகத்தனமாக கற்பழித்தார். இவ்விவகாரம் தொடர்பாக யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவதாக கூறி அவளை தொடர்ந்து பல மாதங்களாக அவர் நாசப்படுத்தியதாக தாயின் மரணத்திற்கு பிறகு அந்த பெண் தனது அத்தையிடம் கூறி அழுதாள். இச்சம்பவத்தை மகள் அம்பலப்படுத்திவிட்டதை அறிந்த தந்தை தப்பி தலைமறைவாகி விட்டார். அவருடன் பேச வேண்டும் என்று பெண்ணின் அத்தை அழைத்தபோது அத்தையின் வீட்டுக்கு இரவு நேரத்தில் அவர் வந்தார். வீட்டினுள் மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர் மீது டெல்லி கோர்ட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
tamilantelevision thanks
|
No comments:
Post a Comment