பதிவு செய்த நாள் -
மே 17, 2013 at 10:01:01 PM
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு கால அதிமுக ஆட்சி, பாராட்டு மழையிலும் விளம்பர வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அளவுக்கும் கூடுதலான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, தேவையான நிதியை திருத்திய மதிப்பீட்டில் எவ்வாறு திரட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள கருணாநிதி, அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட பல அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சி குறித்து பத்திரிகைகள் விமர்சிக்காமல் இருக்க, பல கோடி ரூபாய்க்கு சாதனை விளக்க விளம்பரங்கள் அவற்றுக்கு கொடுக்கப்படுவதாக கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, காவிரிப் பாசன விவசாயிகளின் துயர நிலை, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என அனைத்து முனைகளிலும் அதிமுக அரசு தோல்வியையே சந்தித்திருப்பதாக கருணாநிதி விமர்சித்துள்ளார்.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment