அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 6 May 2013

பாக். சிறைகளில் 23 இந்திய கைதிகள் மனநலம் பாதிப்பு


FILE
இந்தியாவை சேர்ந்த மரண தண்டனை கைதியான சரப்ஜித் சிங் பாகிஸ்தானின் சிறையில் சக கைதிகளால், தாக்கப்பட்டு உயிரிழதுள்ள நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் சுமார் 23 இந்திய கைதிகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை இந்திய, பாகிஸ்தான் நீதித்துறை குழு தெரிவித்தள்ளது.

இந்த குழு கடந்த வாரம் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கபட்டிருக்கும் இந்தியாவை சேர்ந்த கைதிகளை பார்க்க சென்றபோது, சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் வைக்கபட்டிருந்த லாகூர் கோட் லக்பட் சிறையில் 20 கைதிகளும், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் 2 கைதிகளும், கராச்சியில் உள்ள மலிர் சிறையில் 1 கைதியும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் எனத் தெரியவந்தது.

இவர்கள் சிகிச்சைக்காக எந்தவொரு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ள நிலையில், இதை நேரில் கண்டறிந்த இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை குழுவினர், மிகவும் உடல் நலமற்று இருக்கிறவர்களை, மனநலம் பாதித்தவர்களை, செவித்திறன் இழந்தவர்களை, பேச இயலாதவர்களை உரிய மருத்துவமனையில் அனுமதித்து சரியான சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

இத்தகைய கைதிகளில், இளங்குற்றவாளிகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோரை கருணை அடிப்படையிலும், மனித நேய அடிப்படையிலும் நடத்துவதற்கு ஏற்ற வழிமுறை காண வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கைதிகளையும், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் வருடத்துக்கு குறைந்தது 4 முறையாவது தூதரக அதிகாரிகள் பார்த்து வர வகை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.webdunia  thanks

No comments:

Post a Comment