அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 5 May 2013

மலேசியாவில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி


இடப்பக்கம் உள்ள பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான கூட்டணி மீண்டும் தேர்தலை வென்றுள்ளது
இடப்பக்கம் உள்ள பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான கூட்டணி மீண்டும் தேர்தலை வென்றுள்ளது

மலேசியாவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக ஆண்டுவருகின்ற பாரிசான் தேசியக் கூட்டணி ஞாயின்றன்று நடந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்று அக்கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் தேர்தலில் கவலையளிக்கும் விதத்தில் மக்கள் பிளவுபட்டுப்போயிருந்தனர் என்றும், சீன இனச் சிறுபான்மையினரிடையே எதிர்க்கட்சி ஆதரவு அலை சுனாமி போல பெருக்கெடுத்தது என்றும் பிரதமர் நஜீப் ரஸாக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்னும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
பல்வேறு தேர்தல் முறைகேடுகளுக்க்கு நாட்டின் தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மலேசிய சரித்திரத்தில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடுமையான போட்டி இந்தத் தேர்தலில் நிலவியிருந்தது.
222 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 133 இடங்கள் ஆளும் பாரிசான் கூட்டணிக்கும் 89 இடங்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் சென்றுள்ளன.


தேர்தல் முடிவுகள் - ஒரு ஒப்பீடு

2008 தேர்தல் 2013 தேர்தல்
பாரிசான் தேசியக் கூட்டணி 140 பாரிசான் தேசியக் கூட்டணி 133
எதிர்க்கட்சிக் கூட்டணி 82 எதிர்க்கட்சிக் கூட்டணி 89
நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 222

bbc.co.uk thanks

No comments:

Post a Comment