அ.தி.மு.க.இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் 25-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-வரை மாநிலம் முழுவதும் நடக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் . இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க.இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்குவதுடன், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையை சேர்ந்தவர்களை தயார் படுத்துவது, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதற்கென பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கூட்ட தேதிகளையும் அவர் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
tamilantelevision thanks
|
No comments:
Post a Comment