(News CourtesY: Deccan Chronicle, Image Courtesy:http://www.savethechildren.in)
பிறந்து ஒரு நாளில் ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன
உலகமெங்கும் பிறந்த முதல் நாளிலேயே இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியக் குழந்தைகள். இந்தியத் தாய்களில் 170ல் ஒருவர் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார். சிறுமிகளில் 47% பேருக்கு பதினெட்டு வயது நிறையும் முன்பே திருமணம் நடத்தப் படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 56000 தாய் பிரவசத்தின் போது உயிரிழக்கிறார்கள். இது உலகிலேயே அதிகமானது. குழந்தையிம் மரணத்திம் மற்றொரு கசப்பான பக்கம் மறுபடியும் அதிக இடைவெளியின்றி அந்தத் தாய் கருவுறக் கட்டாயப் படுத்தப் படுகிறாள்.
குழந்தைத் திருமணம் முதல் காரணம். முழுமையான தகுதியை உடல் அடையும் முன்பே ஒரு சிறுமி தாயாகிறாள். அடுத்தது சத்துணவு அல்லது புரத சத்து மிகுந்த உணவு என்பது பற்றி நகர்ப் புறங்களிலும், படித்தவர்களிடையேயும் கூட சரியான அறிவு கிடையாது. மாச்சத்து உணவே நாம் பெரிதும் உண்பது. நார்ச்சத்து, புரதச் சத்து நாம் அறியாதது. அதிகம் விலையில்லாத முட்டை, முளை கட்டிய பயறு வகைகளில், கீரை வகைகளில் ஒரு தாய்க்குத் தேவையான சத்து கிடைத்து விடும். விழிப்புணர்வு இல்லாததும், பெண்களை முறையாக அக்கறையுடன் கவனிக்கும் பாரம்பரியமே இல்லாததும் முக்கியமான காரணங்கள்.
பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆணாதிக்கம் மிக்க சாதி அமைப்புகள் ஏகப்பட்ட வழிமுறைகளை, காரணங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணை நல்ல வலுவும் ஆரோக்கியமும் நல்ல எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பவளாகவும் வாழ வைக்க அவர்களிடம் எதுவும் இல்லை.
சமீபத்தில் தமிழ்நாட்டில் காதல் திருமணமே தலை போகிற விஷயம் என்று ஒரு மருத்துவர் கிளம்பினார். ஏழைப் பெண்களின் ஆரோக்கியம் இரண்டாம் பட்சமோ அல்லது ஒரு பொருட்டே அல்ல என்பது போன்றதோ தெரியவில்லை.
பாலியல் வன்கொடுமையோ, நல வாழ்வோ எதையுமே சாதி அமைப்புகள், கிராமப் புற பெரிசுகள் இவர்கள் சரியான முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் நல வாழ்வை உறுதி செய்ய வேண்டும். அரசாங்கமோ, தன்னார்வ அமைப்புகளோ எடுக்கும் முயற்சிகளில் அப்போது மட்டுமே பெண்கள் பங்கு பெற்று மேம்பட முடியும்.
பெண்ணடிமை என்பது சமுதாயம் உருப்படுவதற்கு முக்கியத் தடை.
tamilwritersathyanandhan thanks
No comments:
Post a Comment