MONDAY, 13 MAY 2013 00:13

பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் மீண்டும் பிரதமராக வாகை சூடவுள்ளார்.
பாகிஸ்தானில் இரு முறை பிரதமராக பதவி வகித்த நவாஷ் ஷரிப் தனது 63 வயதில் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுகிறார்.
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று எந்தவித இராணுவ சதிமுயற்சி தாக்குதலும் இல்லாமல் மீண்டும் மக்களாலேயே கலைக்கப்பட்டு பொதுஜன வாக்களிப்பின் மூலம் புதிய ஆட்சி உருவாகியுள்ளது.

தலிபான்களின் கடும் அச்சுறுத்தல், தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற வன்முறைகள், குறிப்பாக குண்டுவெடிப்பு தாக்குதல் என்பவற்றையும் மீறி பெருமளவிலான பாகிஸ்தானிய மக்கள் இம்முறை தேர்தல் வாக்களில்ப்பில் கலந்து கொண்டனர். மொத்தம் நாடாளுமன்றத்தின் 272 ஆசனங்களுக்காக இடம்பெற்ற தேர்தலில் 125 இடங்களை நவாஷ் ஷெரிப்பின் கட்சி கைப்பற்றியது.
அவர் பிரதமராவதற்கு குறைந்தது 137 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சில கட்சிகளின் கூட்டனி மூலம் அவர் இதனை இலகுவாக பெற்றுவிடுவார் என்பதால் இந்த வார இறுதியில் உத்தியோகபூர்வமாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நவாஷ் ஷெரிப்பின் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என கருதப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் ஈ இன்ஷாப் (PTI) கட்சி, 35 ஆசனங்களை கைப்பற்றியது. தான் தேர்தலில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் - இந்தியாவுக்கான உறவை வலுப்பெடுத்துவேன் என அவர் நவாஷ் ஷெரிப் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன் படி தற்போது கருத்து தெரிவித்துள்ள அவர், முஷாரப் இராணுவ சதிப்புரட்சி மூலம் தன்னிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முன்னர், புதுடெல்லியுடனான மனக்கசப்பை நீக்க பாடுபட்டேன். தற்போதும் அதை தொடரவுள்ளேன் என்றார்.

4tamilmedia thanks
No comments:
Post a Comment