ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திமுக மாவட்ட பொருளாளர் சேக்தாவூது இல்ல திருமணத்தை 22.05.2013 புதன்கிழமை காலை நடத்தி வைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாலையில் தென்காசியில் மாவட்ட திமுகவின் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் கருப்பசாமி அறிமுக உரை நிகழ்த்தினார்.
நெல்லை மாவட்ட திமுக சார்பில் ரூபாய் 3 கோடி மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
செய்தி: பரமசிவம்
படங்கள்: ராம்குமார்
nakkheeran thanks
No comments:
Post a Comment