அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 22 May 2013

அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்

[ புதன்கிழமை, 22 மே 2013, 
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாட்டில் இருந்து 'மரச் சாமான்கள்' என்று குறிப்பிடப்பட்ட கண்டெய்னர் ஒன்று துபாயில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது.
அந்த கண்டெய்னரில் இருந்த பெட்டிகளை சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். பெட்டிகளின் உள்ளே ஆப்பிரிக்க நாட்டின் அரியவகை யானை தந்தங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 259 தந்தங்களை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், இவற்றை அனுப்பிவைத்த ஆப்பிரிக்க ஏஜென்டை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சர்வதேச யானை தந்தம் கடத்தல்(தடுப்பு) ஒப்பந்தத்தில் துபாய் அரசு கையொப்பமிட்டுள்ளது.
துபாயின் உள்நாட்டு சட்டவிதி 11ன் கீழ் யானை தந்தம் கடத்தல் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newsonews thanks

No comments:

Post a Comment