- WEDNESDAY, 15 MAY 2013 05:07

மத்தியில் ரயிவேத் துறையில் ஏற்பட்ட லஞ்சம் பெற்ற விவகாரத்தின் வழக்கு விசாரணை இன்னும் மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டு விடும் என்று, சி பி ஐ தலைவர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில், விசாரணை வரைவு அறிக்கையில் சட்டத்துறை அமைச்சர் திருத்தம் செய்ததை ஒளிவு மறைவு இன்றி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, அனைவரின் நம்பகத் தன்மையையும் பெற்றுவிட்ட ரஞ்சித் சின்ஹாவின் கையில் அடுத்து, ரயில்வேத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் உறவினர் லஞ்சம் பெற்ற வழக்கும் வந்துள்ளது.
இந்த விசாரணையிலும் கொஞ்சமும் பாரபட்சமின்றி ரஞ்சித் சின்ஹா நடந்து கொள்வதாகவே டெல்லி அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அதன் படி, ரஞ்சித் சின்ஹா தலைமையிலான சி பி ஐ குழு, பன்சாலின் அலுவலக அதிகாரிகள் வரை விசாரணையை முடித்துவிட்ட நிலையில், பன்சாலை விசாரிக்க சரியான சமயம் மற்றும் முறையான் ஆதாரங்களைத் திரட்ட காத்து இருக்கிறது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ரயில்வே லஞ்ச விவகார வழக்கை இன்னும் 3 மாதங்களில் முடித்து விடுவோம் என்று ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

4tamilmedia thanks
No comments:
Post a Comment