அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 14 May 2013

கடற்படை அதிகாரிகள் மீதான பாலியல் புகார் மீது கடும் நடவடிக்கை : ஏ கே அந்தோணி


கடற்படை அதிகாரிகள் மீதான பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க,
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.


கடற்படை அதிகாரிகள் சிலர் பெண்களுக்கு ஆபாச எஸ் எம் எஸ் அனுப்புவதாகவும், சிலர் தங்கள் மனைவிகளை சக அதிகாரிகளிடம் பாலுறவு வைத்துக் கொள்ள சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், சிலர் கள்ளத்தொடர்பு வைத்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன

இப்படி பாலியல் புகார்களுக்கு ஆளான அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்வாரில் உள்ள கடற்படை கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவரின் மனைவி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோணியிடம் கடந்த மாதம் 30ம் திகதி ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் மது அருந்த சொல்லி வற்புறுத்துவதாகவும், சக அதிகாரிகளுடன் பாலுறவு வைத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்துவதாகவும், இதை யாரிடமாவது கூறினால் தனது நிர்வாணப் படத்தை இணைய தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுகிறார், என்றும்  குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடற்படை கமாண்டர்களின் மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, "ராணுவத்தின் கெளரவத்தைக் காப்பாற்ற கடற்படை அதிகாரிகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடற்  பகுதியில், சீன கடற்படையினர் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவு, மினிகாய் தீவு ஆகிய பகுதிகளில் கூடுதல் கடற்படைத் தளங்கள் அமைக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது." என்று கூறியுள்ளார்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment