அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 24 May 2013

நல்லெண்ண அடிப்படையில் 45 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்

நல்லெண்ண அடிப்படையில் 45 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், மே 24-

சர்வசேத கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்வதும், பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா கைது செய்வதும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. இரு நாடுகளுக்கிடையிலான கடல் எல்லையை நிர்ணயிப்பது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் அது வெற்றி பெறவில்லை. இதன் விளைவாக இரு நாட்டின் சிறைகளிலும் அப்பாவி மீனவர்கள் அடைபட்டுள்ளனர்.

ஆனால், பதட்டத்தை தணித்து, நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில், பாகிஸ்தான் சிறையில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இந்திய மீனவர்கள் 45 பேரை விடுதலை செய்ய, அந்நாட்டின் இடைக்கால பிரதமர் மிர் ஹசர் கான் முடிவு செய்தார்.

அதன்படி நல்லெண்ண அடிப்படையில் 45 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு இன்று விடுதலை செய்துள்ளது. கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 45 இந்திய மீனவர்களும் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அவர்கள், பஸ் மூலம் வாகா எல்லைக்கு அனுப்பி, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட பாகிஸ்தான் பிரதமர், இந்திய அரசும் இதேபோல் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது 482 இந்திய கைதிகள் பாகிஸ்தான் சிறையிலும், 496 பாகிஸ்தான் கைதிகள் இந்திய சிறைகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

maalaimalar thanks

No comments:

Post a Comment