ராமேசுவரம்,
சமூக விரோத செயல் களை தடுக்க ராமேசுவ ரத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட் டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ராமேசுவரம் நகர் பாது காப்பு மற்றும் போக்குவ ரத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார், கரு ணாநிதி, லாட்ஜ் உரிமையா ளர்கள் சங்க தலைவர் சந்தி ரன், செயலாளர் நாகராஜ், துணை தலைவர் குணசேக ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட் டது.
கூட்டத்தில் அனைத்து லாட்ஜ்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். வெளி நாட்டினரிடம் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை சரிபார்த் தபின் அவர்கள் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். சந்தே கப்படும்படியான நபர்கள், இளம்ஜோடிகள், அதிக பொருட்களுடன் வருபவர் கள் குறித்து போலீஸ் நிலையத் துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் வரும் கார் எண் கள், அவை நிறுத்தப்படும் இடங்களை குறிப்பிட வேண் டும் என்று கேட்டுக்கொள் ளப்பட்டது.
எச்சரிக்கை
மேலும் சமூக விரோத செயல்களை தடுக்க அனுமதி இல்லாமல் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள், சுற் றுலா பயணிகளை தங்க வைக்கக்கூடாது. அவ்வாறு தங்க வைப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
dailythanthi thanks
No comments:
Post a Comment