அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 14 May 2013

மகாசேன் புயல்: இலங்கையில் 7 பேர் பலி - 3 ஆயிரம் பேர் வீடு இழப்பு


மகாசேன் புயல்: இலங்கையில் 7 பேர் பலி - 3 ஆயிரம் பேர் வீடு இழப்பு
கொழும்பு, மே 14-

சென்னையில் இருந்து தென்கிழக்கில் சுமார் 700 கி.மீ. தொலைவில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'மகாசேன்’ புயல் தற்போது மியான்மர், வங்கதேசம் நோக்கி நகர்ந்து சென்றது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றும் வீசியதால் ஏராளமான பயிர்கள் சேதம் அடைந்தன.

நேற்று ஆந்திராவை தாக்கிய மகாசேன் புயல் சற்றே சீற்றம் தணிந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 750 கி.மீட்டர் வடகிழக்கே நிலை கொண்டுள்ளது. இதன் தாக்கமாக இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது.

இந்த மழைக்கு 7 பேர் பலியாகினர். சுமார் 3 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலை பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு பேரிடர் தவிர்ப்பு முகமை அறிவித்துள்ளது

maalaimalar thanks

.

No comments:

Post a Comment