அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 14 May 2013

ஆதம்பாக்கத்தில் கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி


ஆதம்பாக்கத்தில் கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
ஆலந்தூர், மே. 14- 

ஆதம்பாக்கம் ஏ.எஸ்.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் 2-வது தளத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வெங்கடேசன் என்பவர் கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். 

இன்று காலை ஆதம்பாக்கம் பிருந்தாவனம் நகரில் இருந்து கோபிநாத் (21), லட்சுமணன் (41), பிரேம் குமார் (31) ஆகியோரை கட்டிடப் பணிக்காக அழைத்து வந்தார். அவர்கள் 2-வது தளத்தில் காங்கிரீட் அமைப்பதற்காக இருப்புகளை கட்டி மேலே தூக்கினார்கள். 

அப்போது இரும்பு கம்பி, கட்டிடத்தின் அருகே செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டது. உடனே பயங்கர வெடிச்சத்தம் போல் சத்தம் கேட்டது. இருப்பு கம்பியை தூக்கிப் பிடித்து இருந்த 3 தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டனர். 

இதைப்பார்த்த பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். மின்சாரம் தாக்கியதில் கோபிநாத்தும், பிரேம்குமாரும் அதே இடத்தில் பலியானார்கள். 

உயிருக்குப் போராடிய லட்சுமணனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பலியான கோபிநாத்துக்கு சொந்த ஊர் திருக்கோவிலூர், லட்சுமணன் கோவிலம்பாக்கம் ஈஞ்சங்காடைச் சேர்ந்தவர். பிரேம்குமார் புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர். இவர்கள் சென்னையில் தங்கி கட்டிட தொழில் செய்து வந்தார்கள்.

maalaimalar thanks

No comments:

Post a Comment