அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 25 May 2013

சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப மனு

சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப மனு
ரியாத், மே 25-

சவுதி அரேபியாவில் இயங்கி வரும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு 10 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற 'நிடாகட்' சட்டத்தை சவுதி அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து சவுதியில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக சவுதியில் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும், வரும் ஜூலை 3ம் தேதிக்குள் சவுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தொழிலாளர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டங்களை மீறிய வகையில் சவுதியில் தங்கியுள்ளவர்கள், தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு சிறைவாசமோ, அபராதமோ விதிக்கப்படாது என இந்திய அரசுக்கு சவுதி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சவுதியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து அனுமதியின்றி அங்கு தங்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்திய தூதரகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

இந்த மனுக்களை பரிசீலிப்பதற்காக டெல்லியில் இருந்து கூடுதலாக 10 அதிகாரிகள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சுமார் 4 ஆயிரம் இந்தியர் தாய்நாடு திரும்ப விரும்புவோரின் மனுக்களை பரிசீலிப்பதில் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.

மே 20ந்தேதி வரை 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் எனவும் கூறப்படுகிறது.

பெறப்பட்ட மனுக்களில் 56 ஆயிரத்து 734 மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது.

நாளொன்றுக்கு 500 பேருக்கு தாயகம் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


maalaimalar thanks

No comments:

Post a Comment