திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 7 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4ஆம் தேதி செய்யாறு அடுத்து உள்ள மேல்போதேரியிலும், பிரம்மதேசத்திலும் தனியார் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கில் பாமகவைச் சேர்ந்த எமநாதன், குமரன், ராமச்சந்திரன், பாஸ்கரன், சண்முகம், ரவிச்சந்திரன், மாதவன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே, அந்த 7 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
மேலும் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததோடு, மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு இடையூறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பத் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரபு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

nakkheeran thanks
No comments:
Post a Comment