இந்திய கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த ஆஸ்திரேலிய வாலிபருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் (அதிக பட்ச தண்டனையாக?) 45 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர், சிட்னியில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவி தோஷா தாக்கர் என்பவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சூட்கேசில் அடைபட்டிருந்த நிலையில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அவரது உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவருடைய அறைக்கு பக்கத்தில் வசித்து வந்த ஸ்டானி ரெஜினால்டு எனும் மாணவரே இக்குற்றச்செயலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்யப்பட்டு கடந்த இரு வருடங்களாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அவ்வாலிபருக்குரிய தண்டனை அறிவிக்கப்பட்டது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் ஒயரால் குறித்த மாணவியின் கழுத்தை இறுக்கி கொன்றதுடன், அந்த மானவியின் உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசியுள்ளார்.
'இளம்பெண்ணை பல நாட்களாக குற்றவாளி தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளதுடன், அவரது கணணியில் இந்திய பெண்கள் இடம்பெறும் ஆபாச படங்களும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக்கொலை செய்த முன்னாள் கிரிமினல்களின் வாக்குமூலங்களும் பதிவாகியுள்ளன. எப்படி ஒருவரை கொடுமையாக கொலை செய்வது என்பதை கற்கை நெறியாக பயின்று வந்திருக்கிறார்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், கொடுமையான கொலைகள் செய்தவர்கள் தொடர்பில் 9,500 இணையக்கட்டுரைகளை அவர் வாசித்துள்ளார்.
தாக்காரை கொலை செய்த பின்னர் சூட்கேஸில் பூட்டி காரில் வெகு இயல்பாக கொண்டுவந்து ஏற்றிய சிசிடிவி கெமெரா பதிவுகளையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தகாரை இரு நாட்களாக காணவில்லை என அவரது காதலர் காவல்துறையிடம் புகார் கொடுத்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ஸ்டானி ரெஜினால்ட்டும் அப்பெண்ணின் காதலருடன் இயல்பாக உரையாடியுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றம் இன்று அவ்வாலிபருக்கு வழங்கிய தீர்ப்பில் மிக இளவயதில் இவ்வாறு திட்டமிட்டு மிருகத்தனமான குற்றச்செயலில் ஈடுபட்டதால் அதிகபட்ச தண்டனையாக 45 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிப்பதாகவும், இதில் 30 ஆண்டு (2043) வரை பரோலில் கூட விடுவிக்க கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

4tamilmedia thanks
No comments:
Post a Comment