அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 20 May 2013

காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

[ திங்கட்கிழமை, 20 மே 2013, 
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சிவா(21), இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பணி நிமித்தமாக அடிக்கடி இவர் சென்னை செல்வது வழக்கம். சென்னை பொன்னேரியை சேர்ந்தவர் காசிநாடார். இவரது மகள் சவுமியா(20).
சிவா சென்னை சென்ற போது சவுமியாவை சந்தித்ததில் காதல் ஏற்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சவுமியாவை நாகர்கோவில் அழைத்து வந்து சிவா திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்துக்கு சவுமியாவின் பெற்றோரும், சகோதரரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் சவுமியா காதலனை கரம் பிடித்தார். கணவர் வீட்டில் சவுமியா குடும்பம் நடத்தி வந்தார்.
நேற்று மாலையில் ஒரு காரில் சவுமியாவின் சகோதரர் சபரி உட்பட நான்கு பேர் சவுமியா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு முதலில் அன்பாக பேசுவது போல் நடித்த சபரி திடீர் என்று சவுமியாவை கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதை தொடர்ந்து கணவர் சிவா மற்றும் மாமனார் ஜெயராம் ஆகியோரையும் வெட்டினார். உயிருக்கு பயந்து வீட்டுக்கு வெளியே ஓடிய இருவரையும் அவர்கள் ஓடஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பி விட்டார்.
இதில் படுகாயமடைந்த இருவரும் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயராம் ஆஸ்பத்திரியில் இறந்தார். சிவாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

.newindianews thanks

No comments:

Post a Comment