May 24, 2013 09:36 am
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது வசந்தகாலம் நிலவி வருகின்ற வேளையில் அடுத்த சில நாட்களில் பல இடங்களில் பனி கொட்டத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையமான மீட்டியோ சுவிஸ்(MeteoSwiss)அறிவித்துள்ளது.
வானிலை குறித்து மீட்டியோ வெளியிட்ட அறிக்கையில், நாளை 600 மீற்றர் உயரம் உள்ள இடங்களில் கூட பனிப்பொழிவு தொடங்கும். ஆல்ப்ஸ் மலைகளில் குளிர்0டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.
கிராபுண்டென் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பனி கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த புதன் இரவு முதல் சான் பெர்னாடினோ கனவாய் வழியாகச் செல்லும் சாலையை கடும்பனி மூடியுள்ளது. இதனால் வண்டி வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமேதான் பகுதியில் நாளை கடும் பனிப்பொழிவு காணப்படும். யூரி மாநிலத்தில் உள்ள ஆண்டர்மாட்டில் 2 டிகிரி வெப்பம் மட்டுமே நிலவும். மேலும் வலாய்ஸ் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜெர்மாட்டிலும் பனிப்பொழிவு அதிகரிக்கும்.
எனினும் வருகின்ற திங்கட்கிழமை நாடு முழுக்க வெப்பத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஜெனீவா, லூகானோ போன்ற ஊர்களில் 18 டிகிரி வரை வெப்பம் நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment