அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 24 May 2013

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
May 24, 2013  09:31 am
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


தஞ்சை நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் அமுதா (31). எம்.காம். பட்டதாரி. இவருக்கும் தஞ்சை சீனிவாசபுரம் காந்திபுரத்தை சேர்ந்த குணசேகரன் மகன் நந்தகுமார் என்கிற வெங்கடேசுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்தனர்.

நந்தகுமார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன் படி இன்று காலை தஞ்சை கொடிமரத்து மூலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் மணப்பெண் அமுதா இன்று காலை தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தார். அப்போது தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் கட்டாய திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும்இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

உடனடியாக மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் மணப்பெண் அமுதாநந்தகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். மணப் பெண்ணிடம் ஏன் திருமணத்திற்கு மறுக்கிறீர்கள் என போலீசார் கேட்டனர். 

அதற்கு அவர் மணமகன் நந்தகுமார் திருமணத்திற்கு பின் உனது பெற்றோரை சந்திக்க கூடாது என எழுதி கொடுக்கும் படி கேட்டார். அதனால்தான் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறினார்.

இது பற்றி மணமகன் நந்த குமாரிடம் விசாரித்த போது நான் வாய்மொழியாகத்தான் அப்படி தெரிவித்தேன். எழுதி தரும்படி சொல்லவில்லை என்றார். இருவரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

மணமகள் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு வீட்டு உறவினர்களிடம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து இருந்தனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.


thamilan. thanks

No comments:

Post a Comment