சென்னை, மே 18-
சென்னையில் சமீப காலமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் முகத்தை முழுவதும் துணியால் மூடிக் கொண்டும், கைகளுக்கு உறை அணிந்தும் செல்வது பேஷனாகி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கவும், வாகனங்களின் புகை, தூசிகளில் இருந்து அலர்ஜி ஏற்படாமல் பாதுகாக்கவும் முகத்தை மூடிச் செல்வதாக கூறுகின்றனர்.
இவர்களது உடலில் போதுமான அளவு வெயில் படாததால் விட்டமின் டி குறைவு ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்ணாநகரில் உள்ள சவுந்தர பாண்டியன் ஆஸ்பத்திரியில் கடந்த 6 மாதமாக நடத்தப்பட்ட சர்வேயில் 20 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் 1200 பேரை பரிசோதித்ததில் 90 சதவீதம் பெண்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக இவர்களுக்கு கழுத்து வலி, எலும்பு தேய்மானம் போன்ற நோய் அறிகுறிகளும் கண்டறியப்பட்டது. உணவு வகைகள் மூலம் 20 சதவீதம்தான் விட்டமின் டி கிடைக்கிறது. ஆனால் வெயில் மூலம் தான் 80 சதவீதம் வைட்டமின் டி ஒவ்வொருவர் உடலுக்கும் கிடைக்கிறது.
எனவே ஒவ்வொருவரும் கண்டிப்பாக தினமும் 1 1/2 மணி நேரமாவது வெயில்படும் வகையில் நமது பழக்க வழக்கங்களை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எலும்பு தேய்மானம், முதுகுவலி, மூட்டு வலிகளில் இருந்து ஓரளவு விடுதலை பெற வெயில் மூலம் கிடைக்கும் விட்டமின் டி ஒவ்வொருவர் உடலுக்கும் மிகவும் அவசியமாகிறது என்றும் கூறி உள்ளனர்.

maalaimala thanks
No comments:
Post a Comment