அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 18 May 2013

வறட்சி நிவாரணம் வழங்க கமிஷன் கேட்கக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை


ராமநாதபுரம்
வறட்சி நிவாரணம் வழங்க கமிஷன் கேட்கக் கூடாது என்று அதிகாரி களுக்கு கலெக்டர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்த குமார் தலைமையில் நடை பெற்றது. வேளாண் இணை இயக்குனர் சக்தி மோகன் முன் னிலை வகித்தார். கூட்டத் தில் கலந்து கொண்ட விவசா யிகள் தங்களது கோரிக்கை களை முன்வைத்தனர். அப் போது மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனதால் நெல் மற்றும் மிளகாய் விவசா யிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவா ரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசன விவசாயி களை போல அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவ னம் இல்லாததால் கறிக்கடைக ளுக்கு அனுப்பும் நிலை உள் ளது. பரமக்குடி கீழ் வடி காலில் கழிவுநீர் வாய்க்கால் கட்டி விடப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுவதால் இதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி கூடுதல் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரண தொகையினை கூட் டுறவு சங்க நிர்வாகிகள் கமி ஷன் எடுத்துக்கொண்டு வழங் குகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
வறட்சி நிவாரணம்
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் நந்த குமார் பேசியதாவது: முதல் அமைச்சர் அறிவித்துள்ளபடி மாவட்டத்தில் உள்ள 393 கிராமங்களில் இதுவரை 345 கிராமங்களில் உழவர் திரு விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் 95 ஆயிரத்து 128 பேர் கலந்து கொண்டு பயனடைந் துள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 2 ஆயிரம் சோலார் பம்புசெட்டுகள் வழங்க முதல்அமைச்சர் உத் தரவிட்டுள்ளார். ரூ.5 லட் சம் மதிப்பிலான இந்த பம்பு செட்டுகள் ரூ.4 லட்சம் மானி யத்துடன் வழங்கப்பட உள் ளது. மாவட்டத்தில் வறட் சியை தாங்கும் வகையில் 5 ஆயிரம் பண்ணை குட்டை கள் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்காக இதுவரை 3 ஆயி ரம் பேர் விண்ணப்பித்துள்ள னர். பண்ணை குட்டைகள் தேவைப்படுவோர் விண்ணப் பித்தால் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். மாவட்டத்தில் 4 சோலார் மிளகாய் உலர் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட் டத்துக்கு ஒரு ஏரி தூர்வாரும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் ரூ.1 கோடி மதிப்பில் தூர்வா ரப்பட உள்ளது. இது தவிர மாவட்டத்தின் வறட்சியை போக்கும் வகையில் வைகை அணையில் இருந்து ராமநாத புரத்துக்கு தனி கால்வாய் அமைக்கும் திட்டம் நிறைவேற் றப்பட உள்ளது.
நடவடிக்கை
மாவட்டத்தில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 817 விவசாயிக ளுக்கு ரூ.131 கோடியே 68 லட்சத்து 36 ஆயிரத்து 990 நிவாரண தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் படி அந்தந்த விவசாயிகள் தங் கள் பகுதிகளில் உள்ள கூட்டு றவு சங்கங்களில் அறிவிக்கப் பட்டுள்ள நிவாரண தொகையை பெற்றுக்கொள் ளலாம். இதற்காக நிவாரண தொகை வழங்கப்படும் பகுதி களில் முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் நிவாரண தொகையை பெறுவதற்கு யாருக்கும் பணம் கொடுக்க தேவையில்லை. அவ் வாறு பணம் கேட்பவர்கள் குறித்து புகார் செய்தால் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும். இவ்வாறு அவர் கூறி னார்.  
dailythanthi thanks

No comments:

Post a Comment