அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 23 May 2013

தொடர் மின்வெட்டுக்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன? - கருணாநிதி

தொடர் மின்வெட்டுக்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன? - கருணாநிதி
சென்னை, மே 23-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:- 

கேள்வி:- 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, அ.தி.மு.க. சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், “இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும்; வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள்! ஆனால் தமிழகத்தில் உண்மை நிலை என்ன? 

பதில் :- 10-10-2008 அன்று தி.மு. கழக ஆட்சியில் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தபோது, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “மின்சாரம் என்ற ஒன்று இருக்கின்றதா என்று மக்கள் சிந்திக்கும் அளவுக்குக் கடுமையான மின்சார வெட்டு தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. 

தமிழ்நாட்டை மின்சாரமே இல்லாத மாநிலமாக ஆக்கி விடுவாரோ என்று மக்கள் அச்சப்படும் அளவுக்குத் தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, நெல், மிளகாய், சோளம் போன்ற பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அனைத்துப் பயிர்களும் கருகும் நிலையில் உள்ளன. 

திருமண விழா, காதணி விழா, புதுமனை புகு விழா என எந்த விழாவையும் மக்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை. ஏனெனில் விழா துவங்கும் போதோ, நடந்து கொண்டிருக்கும்போதோ மின்சாரம் தடைபடுகிறது. நல்ல காரியங்கள் நடைபெறும்போது மின்சாரம் தடைபடுவதை ஒரு அபசகுனமாக மக்கள் நினைக்கிறார்கள்” என்றெல்லாம் அறிக்கை விடுத்தார். ஆனால் தற்போது என்ன நிலைமை? 15 மணி நேரம், 18 மணிநேரம் மின்வெட்டு தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. 

சட்டப்பேரவை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு, ஒரு முறைக்கு இரண்டு முறை ஏற்பட்டுள்ளதே! இது யாருக்கு அபசகுனம்? இப்போது மக்கள் விழாக்களை நடத்தும்போது மின்வெட்டு ஏற்படுகிறதே; அதற்கு யார் காரணம்? யாருடைய நிர்வாகத் திறமையின்மை? மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? 

கேள்வி :- கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி முதலமைச்சர் ஜெயலலிதா 21-5-2013 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? 

பதில்:- 3ஆம் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தை 21ஆம் தேதி பிரதமருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறார் என்றால், கச்சத் தீவு பிரச்சினையில் அவருக்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதா அல்லவா? 20-4-1992 அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசும்போதே “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறியவர்தானே? அதனால் இத்தனை நாட்களுக்குப் பிறகு திடீரென்று தீர்மானம் நிறைவேற்றியது நினைவுக்கு வந்து, பிரதமருக்கு அதனை அனுப்பி வைத்திருக்கிறார் போலும்! 

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

maalaimalar thanks

No comments:

Post a Comment