- Sunday, 05 May 2013 07:20

இன்று ஞாயிற்றுக் கிழமை கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது
.
அதன்படி காலை தொடக்கும் 223 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வாக்கு பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
மாநிலத்தில் மொத்தம் 4,18,38,541 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 52,049 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பதற்றமான 14 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் கண்டெறியப்பட்டிருப்பதாகவும் இவற்றின் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்துவதற்காக 1.35 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
காங்கிரஸ், பாஜக, மஜத, கஜக, அதிமுக, பிஎஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜவாதி, ஐஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இத் தேர்தல் களத்தில் உள்ளன. இதில் காங்கிரஸிற்க்கும் பாஜகவிற்கும் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment